* *ஆகவே… கோபப்படுங்கள்**

0
152

* *ஆகவே… கோபப்படுங்கள்**

*கோபம்*
அழிவிற்கான-ஆயுதம்!

அளவோடிருந்தால்…
ஆளுமைக்கான அரியாசனம்!

ஆகவே…
அளவோடு கோபப்படுங்கள்!

*கோபம்*
உங்களை உங்களாகவே-காட்டும்
காலக் கண்ணாடி!

உங்களை உங்கள்
சிம்மாசனத்திலிருந்து
இறக்கி விடாத
சிம்மசொப்பனம்!

உங்களை உங்களாகவே வைத்திருக்கும்
வைப்புப்பெட்டகம்!

ஆகவே…
கோபங்கொள்ளுங்கள்!

*கோபம் கொள்ளாதிருந்தால்…*

*நீங்கள்*
*வெறுமையாக்கப்
படுவீர்கள்!

* மரியாதை குறைவாக
நடத்தப்படுவீர்கள்!

*தலைமைப் பண்பிலிருந்து
தள்ளிவிடப்படுவீர்கள்!

*கோழையென
ஒதுக்கி
ஓரங்கட்டப்படுவீர்கள்!

*அடிமைத்தனத்திற்கு
அடுத்தடுத்து
ஆட்படுத்தப்படுவீர்கள்!

ஆகவே…
கோபப்படுங்கள்!

*கோபம்*
*உங்களை*

*தனிமையில் சிந்திக்க
வைக்கும்!

* தனித்துவப் படுத்தும்!

* தனித்து(வமாய்)
முடிவெடுக்கவைக்கும்!

* தலைமைப் பண்பில்
தக்கவைக்கும்!

* பன்முகத் தன்மையை
பறைசாட்டும்!

*தனித் திறமையை
திசை பரப்பும்!

*ஆதலினால்…
*கோபம் ஒரு வரம்!*
ஆகவே…
கோபப்படுங்கள்!

*அநீதிக்கு
எதிராக நீதி
கேட்பது- கோபம்!

*அநியாயத்திற்கு எதிராக
நியாயம் கேட்பது- கோபம்!

* துரோகத்திற்கு எதிராக
துணிவை கேட்பது- கோபம்!

அடிமை தனத்திற்கு எதிராக
விடுதலை
கேட்பது- கோபம்!

*ஆகவே…* *கோபப்படுங்கள்!*

*கோபம் ஒரு வரம்!*

*கோபப்படாத*
*உயிரினங்களுக்கு*
*மற்றொரு பெயர்*
” *ஜடம்*”

என்றும் அன்புடன்,
கவிஞர், இயக்குனர்
பாபாஜீ
*ஆர். குணசேகரன்*
89036 19190
81247 35240

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here