ஆகவே… சிந்தியுங்கள்!” *

0
140

“ஆகவே… சிந்தியுங்கள்!”

சிந்தியுங்கள்!

நடந்தது,
நடப்பது, நடக்கவிருப்பது
அனைத்தையும் சிந்திக்கும் ஆற்றல்
மனித குலத்திற்க்கு
மட்டுமே உண்டு!

கடந்த கால செயல்கள்
நிறைவேறாததன்
காரணங்களை சிந்தியுங்கள்,

நிறைவேறுவதற்க்கான
காரணக் கதவுகளைத்
திறக்க– அது
காத்திருக்கிறது.!

நடப்பது, நடக்கவிருப்பது
நடப்பதற்க்கான
வழியினை சிந்தியுங்கள்,

அறுவடை ஆவதற்க்கான
ஆயுதங்களை அங்கேதான்
அது
அடைத்து வைத்திருக்கிறது.!!

ஏன், எதற்க்கு,
எதனால், எப்போது…?
போன்ற கேள்விகளுக்கும்
— விடை–
“சிந்திப்பதற்க்குள்” தான் இருக்கறது.!

ஆகவே சிந்தியுங்கள்.!

மனித குலத்தின் சிந்தனைகளால் தான்…

* உலகம் புதுப்புதுப் பிறவியெடுத்து
புதிது புதிதாய்
காட்சியளிக்கிறது.!

* சிதைந்த நகரம்
உலகின் சிறந்த சொர்க்கபுரியாய் சிலிர்க்க வைக்கிறது!

* பூமியில் பிளவுண்டாலும் –அது
புதுப்பொழிவுடன்
புதுப்பிக்கப்படுகிறது!

* விஞ்ஞானம் விண்ணில் கூட
விதவையாகாமல்
வியப்பளிக்கிறது!

* மனிதன்
மரித்தாலும் — இங்கே
மனிதம்
உயிர்த்தெழுகிறது!

* சிந்திக்கத் தெரியாதவனை
சித்தபிரம்மை
ஆட்கொள்கிறது!

ஆகவே சிந்தியுங்கள்!!

* சிந்திக்கத்
தெரிந்தவனுக்குத்தான்
படைப்புகள் “உயிர்ப்பு”
தருகிறது.!

* சிந்திக்கத்
தெரிந்தவனுக்குத்தான்
விஞ்ஞானம்
விருந்தளிக்கிறது.!

* சிந்திக்கத்
தெரிந்தவனுக்குத்தான்
பிரபஞ்சம்
மறுபிறவி தருகிறது.!

ஆகவே சிந்தியுங்கள்!
சிந்திக்கத் தெரிந்தவனுக்குத்தான்
சிறகு முளைக்கிறது.!!!

என்றும் அன்புடன்

கவிஞர், இயக்குனர்
பாபாஜீ
ஆர்.குணசேகரன்.
89036 19190
81247 35240

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here