ஆகவே… நட்பு கொள்!

0
106

👳🏻‍♂
மனிதா…
ஓ… மனிதா…!
பழகு…
உறவுகொள்.!
உறவுகளுக்குள்
உன்னதமானது- நட்பு.!
👫👭👬💑👫👭👬

உன்மையாய்,
உன்மையான மனிதர்களைத் தேடித் தேடி
உறவுகொள்.!
உறவுகளுக்குள்
உன்னதமானது – நட்பு.!
👫👭👬👨‍❤‍👨👫👭👬

அனைவரிடமும்
அன்புகொள்.!
நம்பிக்கைக் குறியவரிடம் மட்டுமே
நட்பு கொள்.!
👋🏻👋🏻👋🏻👏👋🏻👋🏻👋🏻

ஒரு நல்ல நட்பு
ஆயிரம் மூலிகைகளுக்கு சமம்.!
🥦🌿🌴🌱🌳☘🍀🌳

நம்பிக்கையானவன்
என்பதைத்தான்- “நண்பன் ” என்றார்கள்.!
👬

உயிரே போனாலும்…
தோள் கொடுப்பதால்தான்
தோழன்- என்றானான்.!
💞

நட்பு என்கிற
உறவின் உன்னதம்
பழகிப்பார்ப்பதில் தான்
புரியும்.!
😂😆😃🤔😍🤣😛

புரிதல் என்கிற
ஒன்றுதான் – நட்பு-
என்கிற
-இதய நாளங்களை –
இணைக்கும்.!
👨‍❤‍👨👩‍❤‍👩💑👨‍👨‍👧‍👦👨‍❤‍👨👩‍❤‍👩💑

நட்பு என்கிற உறவுதான்
கூடுதலாய் நாகரீகத்தை நமக்குள்
விதைக்கும்.!
😍🤩😎🤓

ஆகவே…
நட்புகளை அதிகப்படுத்து- அது
உன் வாழ்க்கைப் பயணத்தை பல திசைகளிலும் பயணப்படுத்தும்.!
🇦🇽🇾🇪🇸🇷🇨🇭🏁🇩🇴🇲🇷

நட்பு கொள்பவர்களின்
வாழ்வியல் முறையை அறி.,
அது உன் வாழ்க்கைப்
பள்ளியில் “புத்தகக்களஞ்சியம்”
என்பதை புரியவைக்கும்.!
📒📕📗📚📖📗📕📒

நீ
பள்ளிக்கூடமாகக் கூட
இருக்க வேண்டாம்,
பாடமாக இரு.,
அது … உன்
அடுத்த தலைமுறையை
மட்டுமாவது
தடுமாற்றத்திலிருந்து
தவிர்த்துயர்த்தும்.!

பிறரிடமிருந்து
எதைக் கற்றாய்…
உன்னிடமிருந்து பிறர்
கற்க எதை_ நீ
விட்டுச்செல்லப்போகிறாய்…?

இப்போதைக்கு
நீ
மகானாக இருப்பதை விட
மனிதனாக இரு!

நீ
மனிதனாக இருப்பதை
விட
மனிதாபிமானியாக இரு.!!
குறைந்த பட்சம் நட்புக்
கரத்தையேனும் நீட்டு…
👋🏻👋👋👋👋👋👋🏻

மனிதன்- உன்னை
மனிதனாக மதிக்கவில்லை எனில்,
உன் மனம் குமுறும்.!

சக மனிதனை – நீ-
மனிதனாக மதிக்கவில்லை எனில்…
– நினைத்துப்பார்!

நினைத்துப்பார்…
அனுபவங்களைத் தவிர
எடுத்துச்செல்ல ஏதிருக்கிறது- உன்
மயானப்பயணத்தில்…!
⚰🔥🔥🔥🔥🔥🔥⚰

ஆகவே…
உன் அனுபவங்களை
உன்னுடனேயே
புதைத்துக்கொள்ளாதே,
விதைத்துவிட்டுச் செல்.!

நீ பழகும்
மனித களத்தில் மட்டும் தான் – உன்
அனுபவங்களை
விதைக்க முடியும்.!

பழக்கமென்கிற
விதைக்குள் தான்
“நட்பு” என்கிற “வேர்” இருக்கும்.!
🥦🌾🌾🌾🌾🌳

ஆகவே பழகு
ஆகவே அனைவரிடமும்
பழக பழகிக்கொள்!

வெற்றிபெற்றவனிடம்
பழகிப்பார்…
தோல்வியைத்
தொலைக்கலாம்.!

தோல்வி கண்டவனிடம்
பழகிப்பார்…
துன்பத்தைக்
கடக்கலாம்.!

வீரனிடம்
பழகிப்பார்…
கோழைத்தனம்
உதரலாம்.!

கோழையிடம்
பழகிப்பார்…
கோபத்தைத்
தவிர்க்கலாம்.!

முதியோரிடம்
பழகிப்பார்…
இளமையைக்
காக்கலாம்.!

குழந்தையிடம்
பழகிப்பார்…
தாயுள்ளம்
பார்க்கலாம்.!

செஞ்சட்டைக்காரரிடம்
பழகிப்பார்…
பொதுவுடைமைப்
பேனலாம்.!

கருஞ்சட்டைக்காரரிடம்
பழகிப்பார்…
பகுத்தறிவில்
வாழலாம்.!

திருடனிடம்
பழகிப்பார்…
பறிகொடுப்பதைத்
தவிர்க்கலாம்.!

தியாகியிடம்
பழகிப்பார்…
தேசநேசம்
காக்கலாம்.!

பலவித மனிதர்களிடமும் பழகிப்பார்…
நீ
முழு மனிதனாகலாம்!!
👨‍👨‍👧‍👧💃🏿🏃🏽‍♂🚶🏿‍♀🚶🏾‍♂👯🏻‍♂👨‍👩‍👧‍👦

ஆகவே பழகு.!
ஆகவே உறவுகொள்.!
உறவுகளுக்குள்
உன்னதமானது – நட்பு.!!!
👫👭👬💑👬👭👫

என்றும் அன்புடன்

கவிஞர், இயக்குனர்
பாபாஜீ
ஆர். குணசேகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here