ஆகவே … பேசுங்கள் !

0
262

* ஆகவே … பேசுங்கள் !.. *???

“தேவைப்பட்டால் மட்டுமே பேசுவோம்”– என்றால்…

நட்பு என்கிற
உன்னதம்
மலராது மடிந்தே போகும்.! ?‍♂??‍♀

அது–
சமாதானம் என்கிற
வார்த்தையை
சமாதி கட்டிவிடும்.! ??

அறிவார்ந்த விசயங்கள்
அபிவிருத்தி அடையாது
அழிந்தே போகும்.!

புதுப்புது உறவுகள்
உருவாகாது உறைக்கல்லாய்
உறைந்தே போகும்.!
???

காதல் என்கிற உயிர்ப்பு
மட்டுமல்ல..,
உலக காதலர் தினமே
காணாமல் போகும்.! ??‍❤‍?‍???‍?‍?‍?

பேச்சு மட்டுமல்ல
ஒலி என்கிற சப்தமோ
இசையோ கூட- இனி
பிறக்காது மலடாகும்.!?????

தீர்வை நோக்கிய
வார்த்தைப் பயணம்
விபத்தில்லாமலே
மரணத்தில் மடியும்.!
???

பகுத்தறிவென்கிற
நம்பிக்கை பகலவன்
மூடநம்பிக்கை இருளில்
இருண்டே போவான்.! ?????

ஆகவே பேசுங்கள்.!
ஆகவே பேசுவோம்.!! ?☎??

ஆம்.!

பேச்சில்- தேவை
தேவையில்லை-என்று
இனம் பிரிக்க இயலாது.✝?☪

எனக்கு
தேவையில்லை என்கிற
வார்த்தைகளின் வலிமை
உங்களுக்கு
புத்துயிர் ஊட்டலாம்.!????✌?

உங்களுக்கு
தேவையில்லை என்கிற
வார்த்தையின் தரம்
எனக்கு
தன்னம்பிக்கை தரலாம்!
????✊

சைகை கூட
ஒரு வகையில் பேச்சுதான்.

சில நேரங்களில்…
மௌனம் கூட
“சம்மதம்” என்கிற
வார்த்தையைத்தான் பேசும்.!?

ஆகவே பேசுங்கள்…!

பேசுங்கள்,
அப்போதுதான் அறிவை
விரிவு செய்து
அகண்டமாக்க இயலும்.!
⏳???

பேசுங்கள்,
அப்போதுதான் பிறரை
மட்டுமல்ல…
உங்களை நீங்களே
உணர முடியும்.!
????

பேசுங்கள்,
அப்போதுதான் உங்களின் அன்பை பிறரிடம்
வெளிப்படுத்த இயலும்.!
????

பேசாமல் இருப்பதும்?
கல்லறைக்குள் உறங்குவதும் ஒன்று.!
⚰⚰⚰

அன்புடன்
கவிஞர், இயக்குனர்
பாபாஜீ
ஆர்.குணசேகரன்.
89036 19190
81247 35240

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here