வா காவிரித்தாயே வா…

0
316

பாளகப் பருவத்திலிருந்து
படிக்கும் பருவம் வரை
உன்னை நான் இப்படி
பல முறைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால்
இப்போது இப்படி
உன்னை பார்த்த போது
அந் நிளத்தில்-நீ
வந்ததுபோல்
என் கன்னத்தில்
நீர் வழிந்தது.

அது ஆனந்தக்கண்ணீரா.!
அல்லது
உணர்ச்சி வயப்பட்டதால் வழிந்த
அன்புக்கண்ணீரா.!
யானறியேன் தாயே!

அன்று தஞ்சை
வெண்ணாறு(காவிரி)
படிக்கட்டில் பார்த்து
ரசிகத்தேன்.

இன்று காரைக்கால்
கடற்கரையில்
காத்திருக்கிறேன்.

ஏன் தெரியுமா?

கடைசி வரை வந்து-நீ
பூமித்தாயின் இறுதிநாள் வரை
எங்கள் தமிழ் பூமியை
தழுவப்போகும்
முதல்
வருகையைக் காணத்தான்.!

மண்ணின்
நேசத்துடன்
பாபாஜீ
ஆர்.குணசேகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here