✍எங்கே என் பாரதிக்கூட்டம்…?

🔥எழுத்தால் தீ மூட்டு…
எரி தனலெரி-
வெந்தீயில் கருகட்டும் காமுக்கூட்டம்…!
பச்சிளம்
பாளகத்தோலுக்களையும்
ஓநாய்க் கூட்டம் ஒழிக்கும் சிறுத்தைகளாய்…
சீரியெழு.

என் எழுதுகோல் கூட்டமே…! ✍

🤜🤛 ஒவ்வொரு கவிஞனுக்கும்
இனி ரௌத்திரம் பழகக்
கற்றுக்கொடுக்க நேரமில்லை,
ருத்திர தாண்டவதாண்டவத்திற்கு
பச்சிளம் தேவதைகளை பழக்கு.,
பாலருந்தும் வாய்க்கு விஷம் கக்கும்
வித்தையை கற்றுத்தா…

பாட்டுடெழுதும்
ஒற்றை பாரதியாய் படித்தோதியது போதும்.!
பாரதிக்கு பாரதியாகு…
பாய்ந்து அரக்கக் குரல்வளை நெரி.!

நீதி கேள்
வீதி வா
எல்லோரையும் உன் எழுத்தாணியால் இணை!
வீணர்கூட்டம் எரி.!

என்றும் உன்னுடன் இருப்பேன்…
நீயேற்றும் தீப்பந்தத்திற்கு தீக்குச்சியாய்….!! 💥

காமப்பசி தீர்க்க
பச்சை உடல் தேடும்
பரதேசிகளே..!

உமது
சிறுவயது பசிக்குப்
பருக மார்பு தொட்டு பால் தேடினா(நா)யே
உன் தாயிடம்,
அந்த தசையைத்தானடா
இப்போது தடவிப்பார்த்தாய்
எம்
சின்னஞ்சிறு தாயிடம்.!

பாவிகளே…!

ஓரிரு வினாடி சுகத்திற்கு…
ஓராயிரம் தலைமுறைகளை
தொடர்ந்து உருவாக்கவிருக்கும்
எம் பிஞ்சுத்தாய்களை
உம் விந்தமிலத்தால் அழிக்கத் துடித்தாயே…
அந்தத் துணிவு
இனி
எந்த எத்தனுக்கும் வாராதிருக்க,
வாளெடுக்கும் துணிவை
இந்த வளைக்கரங்களுக்குக்
கற்றுத்தருவோம்.!

அலைந்து திரிந்து,
தேடிப்பிடித்து
உண்மையை உலகறிய,
நீதியை நிலைநாட்ட …
நாயாய், பேயாய்
வீதியில் போராடி …
இந்த சிறுநரிகளை சிறை தள்ளுவதால்…
சிதைந்து போன
அந்த பிஞ்சு உடல்
வேதனை நீங்குமா…?
உதிரமும் உள்ளமும் உதிர்ந்ததே
அதுதான் மீளுமா அம்மா…!!

சிறுநீர் போகவும் (உடல்)
உறவு கொள்ளவும்
நீண்ட
அந்த அந்தரங்க உறுப்பு,
காமப்பித்து தலைக்கேறி விரைப்படைந்தால்– அப்
பிறப்புறுப்பு அறுத்தெறி…!

இனி
இந்த காம அரக்கர்களுக்கு
சிறுநீர் போக மட்டும்
ஒற்றை ஓட்டை ஒட்டிக்கொண்டிருந்தால்
போதும். !

இந்த ஓநாய்களுக்கு
இனி
மரண தண்டனை,
வேண்டாம்.

அடுத்தொரு பெண்
தோல் தொட
அடுத்தவனிங்கு
அஞ்சி நடுங்க,
ஒற்றை ஓட்டையுடன் உலகறியும்
அடையாளச் சின்னமாய்…
அலைந்து திரியட்டும்…
அறுபட்ட பிறப்புறுப்புடன் …

அப்போதுதான் தெரியும்
அவர்களது வேதனையும்,
பெண்ணினத்தின் பெருமையும்.!!!

என்றும் சமூக அக்கரையுடன்.

கவிஞர்,இயக்குனர்
பாபாஜீ
ஆர் . குணசேகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here