கதை சொல்லும் கதை

0
389

*உங்கள் வாழ்வை மாற்றப் போகிற கதை.*
*படித்தபின் அடுத்தவருக்கும் பகிருவீர்கள்!*

*கதை சொல்லும் கதை*

காட்டில்
ஒரு கருவுற்ற மான்,
தன் குட்டியை ஈனும்தருணத்தில்…

தன் குட்டியை காயமில்லாமல் ஈன
அந்த மான்,
ஒரு அடர்ந்த புல் வெளியைத் தேடியது.

புல்வெளி அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. கரை கடந்து மானை நோக்கி வர ஆரம்பித்தது.

மானோ
கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று புள்வெளிக்குச் சென்றது.

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் பயங்கரமாக மிரட்டியது.

மான் அருகே இருந்த மரத்தைப் பார்த்தது.

அந்த மரத்தின் அங்கே ஒரு வேடன் அம்புடன் மானைநோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மான் வலப்பக்கம் பார்த்தது
பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த கருவுற்ற மான்… பாவம் என்ன செய்யும்?

மானுக்கோ
வலியும் வந்து விட்டது.
திடீரென்று மின்னல் காட்டுமரத்தில் விழுந்து தீப்பற்றி எரிய காட்டுத் தீயும் நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.

*என்ன நடக்கும்?…*

*மான் பிழைக்குமா?…*

*குட்டியை ஈனுமா?…*

*அதன் மகவும் பிழைக்குமா?…*

*இல்லை… காட்டுத் தீ காட்டிலேயே அழித்து விடுமா?…*

*வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?…*

*புலியின் பசிக்கு உணவாகுமா?…*

பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.

*மான் என்ன செய்யும்?…*

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.

ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க,
மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.

*அப்போது நடந்தது சில ஆச்சர்ய நிகழ்வுகள்…*

*மற்றொரு மின்னல் மின்னியது. வேடன் கண் இழந்தான்.*

*அவன் அம்பு, குறி தவறி புலியைத் தாக்கி, அது இறக்கிறது.*

ஆற்றருகே தரை வெடித்தது,
காட்டாறு திசை திரும்பியது.

*மின்னலை தொடர்ந்து கடும் மழை, காட்டுத் தீயை அனைத்தது.*

*அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.*

நமது வாழ்விலும், சில நேரங்களில் இது போன்ற சந்தர்ப்பங்கள் வந்திருக்கும்.
அல்லது வரும்.

அச்சூழலில், பல எதிர்மறையாளர்களின் சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.

*நம் நேர் மறைஎண்ணங்களின் பலம், நம்மை வெற்றி பெறவைத்து, நம்மை வெற்றியாளனாக்கும்.*

*நாம் இந்த மானிடம் இருந்து அந்தக் கடமையயுணர்வை, கவனத்தை, கற்றுக்கொள்வோம்.*

அந்த மானின் கவனம் எப்படி மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தோ அது போல் நம் கவணம் நம் நற்செயலிலேயே இருக்கட்டும்.

அந்த மான்
மற்ற எதையும் பொருட்படுத்தவில்லை. அது அதன் கை வசமும் இல்லை.

மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும்.

*இப்போது, உங்களை கேட்க்கிறேன்*

*நம்பிக்கையும் முயற்சியும் எப்போது இருக்க வேண்டும்?*

*வாழ்வின் ஒரு பெரும் சவாலில் உங்கள் கவனம் எங்கே இருக்க வேண்டும்*

*உங்கள்செயலில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.*

*செயலுக்கு ஏற்ற விளைவுகள் சரியாகவே நடக்கும்.. நடந்தே தீரும்.*
*அது*
*உங்கள் எண்ணப்படியே உங்களை வழிநடத்தும்*

இந்த வாசகங்களை தினமும் காலை எழுந்த உடன் சொல்லுங்கள்

*உங்கள் வாழ்கையில் மாற்றங்களை நிச்சயம் காண்பாய்!*

*பிரபஞ்சம் என்கிற மகா சக்தி* *என்னைக்காக்கும்*

*என் நேர்முறையான எண்ண அலைகள் என்னை ஊடுருவும்.*

*அது என்னைச் சுற்றி புது ஒலி ஒளி மயமான ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும்!*

*அதுவே என்னை வழி நடத்தும்.*

*அதுவே என்னை வாழவைக்கும்.!*

இந்த நம்பிக்கை வார்த்தைகளை நான் சொல்லாமல் இருந்ததேயில்லை.

நான் மாற்றங்களைக் கண்டேன். நீங்களும் காண்பீர்கள்!!

அன்புடன் கவிஞர்,இயக்குனர்
பாபாஜீ

ஆர். குணசேகரன்
81247 35240
99521 35591

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here