கேள்வி – (குறுங்கதை)

0
125

*கேள்வி* (குறுங்கதை)

*வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..*

*நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..?*

*அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?*

*நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..?*

*ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது…*

*உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..?*

*என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… “*

*அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?*
*அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? “*

*இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது…!

பா.கௌதம்
காரைக்கால்-609602
கைப்பேசி: 9500585083

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here