ஆகவே… பாராட்டுங்கள்…

0
178

பாராட்டுங்கள்!

பிறரின் நற்செயல்களை அக்கணமே பாராட்டுங்கள்!

நீங்கள் பாராட்டுகிற ஒவ்வொரு பாராட்டும்
அவர்களுக்கு
பதக்கம்

ஆகவே… பாராட்டுங்கள்!

பாராட்டுகிறவரையும் பாராட்டுங்கள்,
உங்களுக்கு பாராட்டுங்கள்!!

பாராட்டுகிற பண்பு
பண்பு மிக்கவருக்கே உரியது!

கைத்தட்டல்,
முத்தமிடல்,
கை குலுக்கல்,
கட்டை விரல் உயர்த்தல்,
கட்டித் தழுவுதல்,
பரிசளித்தல்,
பட்டமளித்தல்,
பதக்கம் வழங்கல்,
விருது தருதல்…

இன்னும் பாராட்டுக்கள்
பல விதம்!..

பாராட்டுதலின் மதிப்பு
செயல்த்திறனை விட
வலிமை வாய்ந்தது.!

பாராட்டுவது என்பது
உற்சாகமூட்டுவது!
ஆகவே..
ஒவ்வொரு செயலையும்
உற்சாக மூட்டுங்கள்!

ஒவ்வொரு செயலின்
வெற்றியையும்
உற்சாகமூட்டலே
தீர்மானிக்கும்!

உற்சாக மூட்டல் கூட
பாராட்டுதலின் பக்கவிளைவுதான்.!

” உன்னால் முடியும்”

” உன்னால் முடியாதென்றால் யாரால் முடியும் ”

என்கிற தன்னம்பிக்கை
வார்த்தைகளை போர்த்துங்கள்!..

இந்த வார்த்தைக்கு மேலான பதக்கத்தை
இதுவரை யாறும் பார்த்ததில்லை!!

சின்னச் சின்ன செயல்களைக்கூட பாராட்டுக்கள் தான்
பதக்கம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது!

கை தட்டல் தான்…
வெற்றியாளனுக்கு கிடைத்த முதல்
ஆஸ்கர்

முத்தம் தான்…
எதிலும் முதலாய் வரவிருக்கும் குழந்தைக்கு
நோபல்

ஆகவே பாராட்டுங்கள்..
நீங்களும் பாராட்டு
பெருங்கள்.!.
பாராட்டுங்கள்…

என்றும் அன்புடன்

கவிஞர்,
இயக்குனர் பாபாஜீ
ஆர். குணசேகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here